என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கோவா முதல்வர்"
- தனியார் பள்ளியில் பா.ஜ.க. சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடந்தது.
- தேவர் குருபூஜை விழாவையொட்டி ேகாவா முதல்வர் கலந்துகொண்டார்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே தும்மு சின்னம்பட்டி பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் முத்து ராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழாவை யொட்டி பா.ஜ.க. சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடை பெற்றது.
முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜை விழாவில் கலந்து கொண்ட கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், தமிழக பாரதிய ஜனதா கட்சி தலை வர் அண்ணாமலை மற்றும் விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டு ரங்கன் ஆகியோர் கலந்து கொண்டு அவரது நினைவி டத்தில் அமைந்துள்ள தேவ ரின் திருவுருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கிருந்து திரும்பிய கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே யுள்ள தும்மு சின்னம்பட்டி பகுதியி லுள்ள தனியார் பள்ளியில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற மாபெரும் அன்னதான விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணவருந்தினர்.
மேலும் தேவர் குருபூஜை விழாவினையொட்டி நடை பெற்ற இந்த அன்ன தான விருந்து நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணா மலை, விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டு ரங்கன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வா கிகள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உள்பட ஏரா ளமானோர் கலந்துகொண்ட னர்.
- தீபாவளிக்காக அவர்கள் தயாரித்த பொருட்களை விற்க பல்வேறு இடங்களில் ஸ்டால்களை வைத்துள்ளனர்.
- விளக்கு, உண்ணக்கூடிய பொருட்கள் அல்லது பூக்கள் கூட எப்போதும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்கத் தேர்ந்தெடுங்கள்.
கோவா முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்த், தீபாவளி பண்டிகைக்கு ஷாப்பிங் செய்யும்போது உள்ளூர் தயாரிப்புகளை கருத்தில் கொண்டு குடிமக்கள் "உள்ளூர்க்கான குரல்" முயற்சியை ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவா முதல்வர் கூறியதாவது:-
தெற்கு கோவாவில் உள்ள லோலியம் கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் பரிசளித்த தென்னை மரத்தின் இலைகளால் ஆன விளக்கை தாமே பனாஜியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் வைத்துள்ளேன்.
மாநில அரசின் ஸ்வயம்பூர்ணா கோவா முன்முயற்சியின் மதிப்பாய்வின் ஒரு பகுதியாக, கோவா முழுவதிலும் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்களிடம் சாவந்த் உரையாற்றினார்.
அது விளக்கு, உண்ணக்கூடிய பொருட்கள் அல்லது பூக்கள் கூட எப்போதும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்கத் தேர்ந்தெடுங்கள். இதன் மூலம், உள்ளூர் முன்முயற்சிக்கான குரலை ஊக்குவிக்க உதவ வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உணவளிக்கும் பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் தீபாவளிக்காக அவர்கள் தயாரித்த பொருட்களை விற்க பல்வேறு இடங்களில் ஸ்டால்களை வைத்துள்ளனர்.
இந்த பொருட்களை வாங்குங்கள். அவை கொஞ்சம் விலை உயர்ந்ததாக இருந்தாலும், அவைகளை வாங்கி ஊக்குவியுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவை தொடர்ந்து, அங்கு புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பா.ஜனதா தனது கூட்டணி கட்சிகளுடன் இவ்விவகாரம் தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.
பாஜகவின் கூட்டணி கட்சியான மகாராஷ்டிரவதி கோமண்டக் கட்சியைச் சார்ந்த எம்.எல்.ஏ சுதின் தவாலிகர், முதல் மந்திரியாக விரும்புவதாக பாஜக எம்.எல்.ஏ.வும் துணை சபாநாயகருமான மைக்கேல் லோபோ தெரிவித்தார். இதனால், ஆலோசனையில் முட்டுக்கட்டை நீடிப்பதாகவும், இன்று மாலை இவ்விவகாரத்தில் முடிவு எட்டும் என்றும் அவர் கூறினார்.
பாஜக தனது கட்சியைச் சேர்ந்த ஒருவரை முதல் மந்திரியாக்க விரும்புவதால் ஆலோசனையில் உடன்பாடு எட்டப்படவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜகவில் முதல்வர் பதவிக்கு விஸ்வஜித் ரானே, பிரமோத் சாவந்த் ஆகியோரின் பெயர்களை எம்எல்ஏக்கள் முன்மொழிந்துள்ளனர்.
இதற்கிடையே, 14 உறுப்பினர்களை கொண்டுள்ள காங்கிரஸ், தனிப்பெரும் கட்சியாக உள்ளதால், ஆட்சி அமைக்க அக்கட்சியும் முயற்சித்து வருகிறது. 40 எம்.எல்.ஏக்களை கொண்ட கோவா சட்டமன்ற தொகுதியில் 4 இடங்கள் காலியாக உள்ளன. #ManoharParrikar #GoaNextCM
பனாஜி:
கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர். முன்னாள் பாதுகாப்பு துறை மந்திரியான அவர் கடந்த 7 மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சிகிச்சை பெற்றார்.
கோவா, மும்பை, நியூயார்க், டெல்லி ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மனோகர் பாரிக்கர் இல்லாததால் கோவா ஆட்சி அதிகாரத்தில் வெற்றிடம் ஏற்பட்டது.
கடந்த 14-ந் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தது முதல் அவர் பொது வெளியில் முகத்தை காட்டவில்லை. தற்போது வீட்டில் படுக்கையில் தான் இருக்கிறார். டாக்டர்கள், மருத்துவ உதவியாளர்கள் 24 மணி நேரமும் அவரது அறையில் கடமையாற்றி வருகிறார்கள்.
மனோகர் பாரிக்கருக்கு என்ன நோய் என்பதை மாநில அரசும், பா.ஜனதாவும் ரகசியமாக வைத்து இருந்தன. அவரது உடல் நிலை குறித்து விளக்க வேண்டும் என்று எதிர்கட்சியான காங்கிரஸ் மாநிலத்தை வலியுறுத்தியது.
மனோகர் பாரிக்கர் உடல் தகுதியுடன் இருக்கிறாரா? என்பதை 4 நாட்களுக்குள் நிரூபிக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் காங்கிரஸ் கெடு விதித்தது.
இந்த நிலையில் மனோகர் பாரிக்கருக்கு என்ன நோய் என்ற விவரத்தை மாநில பா.ஜனதா அரசு வெளியிட்டுள்ளது. அவர் கணைய புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கோவா மாநில சுகாதாரத்துறை மந்திரி விஸ்வஜித் ரானே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
மனோகர் பாரிக்கர் கோவா முதல்-மந்திரி . அவருக்கு கணைய புற்று நோய் ஏற்பட்டுள்ளது. இந்த உண்மையை மறைப்பதற்கு ஒன்றுமில்லை.
அவர் தன் குடும்பத்துடன் அமைதியாக வாழட்டும். இதற்காகவே எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து அழைத்து வரப்பட்டார்.
அவர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட விரும்பினால் அதை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை. அவர் குடும்பம்தான் அதை தெரிவிக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி கோர்ட்டுக்கு போய் மனோகர் பாரிக்கரின் நோயை தெரிந்து கொள்ள விரும்பினால் அது அவர்களது விருப்பமாகும்.
இவ்வாறு சுகாதார மந்திரி ரானே தெரிவித்துள்ளர். #GoaCM #ManoharParrikar
கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் பித்தப்பை கோளாறு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் முதலில் பனாஜி ஆஸ்பத்திரியிலும், பின்னர் அமெரிக்காவிலும் சிகிச்சை பெற்றார்.
அங்கு சிகிச்சை முடிந்து பனாஜி திரும்பிய நிலையில் மீண்டும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தற்போது டெல்லியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மனோகர் பாரிக்கர் நீண்டகாலம் சிகிச்சை பெற்று வருவதால் அரசு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியவில்லை. அவ்வப் போது ஆலோசனைகள் மட்டும் வழங்கி வருகிறார். இதனால் தற்காலிகமாக முதல் மந்திரி வகிக்கும் இலாகாக்கள் மற்ற மந்திரிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மனோகர் பாரிக்கர் நலம்பெற்று திரும்பி முதல்-மந்திரி பொறுப்பை ஏற்பார் என்று மாநில பா.ஜனதா தலைவர் வினய் தெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதனால் முதல்-மந்திரி இல்லாமலேயே மந்திரிசபை கூட்டம் நடந்து வந்தது.
இதற்கிடையே கோவாவில் பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மராட்டியவாடி கோமந்த கட்சி மற்றும் கோவா பார்வர்டு கட்சிகள் முதல்-மந்திரியாக வேறு ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மனோகர் பாரிக்கர் இலாக்காக்களை தற்காலிகமாக மற்ற மந்திரிகள் கவனித்து வருகிறார்கள். அதை அவர்கள் நிரந்தரமாக கவனிக்கும் வகையில் பொறுப்புகள் மாற்றப்படுகிறது.
மனோகர் பாரிக்கர் சிகிச்சை பெற்று திரும்பும் வரை இலாகா இல்லாத முதல்-மந்திரியாக இருப்பார் என அறிவிக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளது. #GoaCM #ManoharParrikar #BJP
கோவா மாநில முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் கணைய புற்றுநோயால் அவதிபட்டு வருகிறார். இதற்காக அவர் அமெரிக்காவில் சுமார் 3 மாதம் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.
அதன் பின்னர் கடந்த மாதம் முதல் வாரத்தில் அவர் நாடு திரும்பினார். அமெரிக்காவில் தீவிர சிகிச்சை பெற்றபோதும், அவருக்கு நோய் பாதிப்பு குறையவில்லை.
இதையடுத்து கடந்த மாதம் 15-ந் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மனோகர் பாரிக்கர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று எய்ம்ஸ் மருத்துவமனையில் மனோகர் பாரிக்கரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இது பற்றி வெங்கையா நாயுடு தனது டுவிட்டரில், ' கோவா மாநிலத்தின் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரை எய்ம்ஸ் மருத்துவமனையில் சந்தித்து அவருடைய உடல் ஆரோக்கியம் குறித்து கேட்டறிந்தேன். அவர் நமது நாட்டின் மிகவும் அன்பான மற்றும் நேர்மையான மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். அவர் விரைவில் குணமடைந்து வந்து எப்போதும் போல இந்த சமூகத்துக்கு சேவையாற்றுவார் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன். ' என தெரிவித்தார். #VenkaiahNaidu #ManoharParrikar
Met Shri Manohar Parrikar, the Chief Minister of Goa and enquired about his health at AIIMS today. He is one of the most lovable and honest senior politicians of our country. I wish & hope he will get well soon and serve the society as he ever does. #ManoharParrikar
— VicePresidentOfIndia (@VPSecretariat) September 30, 2018
ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று சமீபத்தில் கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
நோயின் தன்மை தீவிரம் அடைந்ததால் கடந்த 15-ம் தேதி மனோகர் பரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள தனி வார்டில் டாக்டர் பிரமோத் கார்க் தலைமையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மனோகர் பரிக்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் கடந்த 8 மாதங்களாக அரசு நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என கோவாவில் ஆளும் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மராட்டிய கோமந்தவாடி கட்சி தலைவர் தடீபக் தவாபிகர் குறிப்பிட்டிருந்தார்.
எனவே மாநிலத்தின் நிர்வாக பொறுப்புகளை மூத்த மந்திரி ஒருவரிடம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மராட்டிய கோமந்தவாடி கட்சி தலைவர் தடீபக் தவாபிகர் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த கோவா பா.ஜ.க. தலைவர் வினய் தெண்டுல்கர், கோவா முதல் மந்திரி பதவியில் மாற்றம் என்ற பேச்சுக்கு இடமில்லை. மனோகர் பரிக்கர் முதல் மந்திரியாக தொடர்ந்து நீடிப்பார் என அறிவித்தார்.
இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கோவா முதல் மந்திரியின் உடல்நிலை தேறி வருவதாகவும் கோப்புகளில் அவர் கையொப்பமிடுவதாக கோவா பொதுப்பணித்துறை மந்திரி சுதின் தவலிக்கர் இன்று தெரிவித்துள்ளார்.
அவருடைய துறைசார்ந்த அனைத்து கோப்புகளை படித்துப் பார்த்து மனோகர் பரிக்கர் உடனடியாக கையொப்பமிட்டு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் எங்களுக்கு அனுப்பி வைக்கிறார். இதுவரை எந்த கோப்பும் நிலுவையில் இல்லை.
முதல் மந்திரியின் உத்தரவின்படி வாரந்தோறும் மந்திரிசபை கூட்டம் நடத்தி பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக முடிவு எடுக்கப்படுகிறது. இந்த முடிவுகள் அறிக்கையாக முதல் மந்திரிக்கு அனுப்பி வைக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். #ManoharParrikar #Goaminister
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்